மேகக்கணிமை (Cloud computing ) & Oracle Cloud Infra

  1. Intro- Cloud computing – மேகக்கணிமை
  2. Oracle Cloud Infrastructure (OCI)
  3. Always Free tier
  4. Compute Instance
  5. Block Storage
  6. Database
  7. Buckets

மேகக்கணிமை: கணிமைத் திறனை இணையம் ஊடாகப் பெறத்தக்கதான ஒரு ஏற்பாடு .

லோக்கல் கணினி அல்லது பெர்சனல் கம்ப்யூட்டரைக் காட்டிலும், தரவைச் சேமிக்க, நிர்வகிக்க மற்றும் செயலாக்க , இணையத்தில் தொகுப்பட்ட ரிமோட் கணினி வலைப்பின்னல் , பயன்படுத்தும் நடைமுறை – மேகக்கணிமை! so Cloud computing என்பது ஒரு காரை வாங்குவதற்குப் பதிலாக வாடகைக்கு எடுப்பது போன்றது

பராமரிப்பைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.தேவைகளுக்கு ஏற்ற மாதிரியை நீங்கள் தேர்வு செய்யலாம், முடித்ததும் திருப்பித் தரலாம். உங்களது சொந்த வன்பொருள் or மென்பொருளை வாங்காமல் அல்லது பராமரிக்காமல் உங்கள் கோப்புகளைச் சேமிக்க, உங்கள் பயன்பாடுகளை இயக்க அல்லது பல்வேறு பணிகளைச் செய்ய.

சந்தையில் பல கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகள் உள்ளன, ஆனால் மிகவும் பிரபலமான சில:

AWS/Azure/Google ஐப் போல, Oracle அதன் சொந்த கிளவுட் இயங்குதளத்தைக் கொண்டுள்ளது Oracle Cloud Infra(OCI) . மேலும் சந்தையைப் பிடிக்க, developers மற்றும் தனிநபர்கள் மற்றும் சிறு வணிகங்களை இலக்காகக் கொண்ட அனைத்து நேர இலவச அடுக்கு திட்டங்களையும் அவர்கள் கொண்டுள்ளனர். Yes, OCI என்பது ஒரு cloud platform!

  • Compute Instance : இது உங்கள் கணினி processor. AMD/Intel போலவே, உங்களுக்காக வழங்கப்பட்ட விருப்பங்களிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம். எதுவாக இருந்தாலும்: 2 AMD VM’கள் + 4 ARM கம்ப்யூட் உறுதி. 200 GB block volume அடிப்படையில் நீங்கள் பல instanceகளை உருவாக்கலாம்.
  • ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில் உபுண்டு , ஆரக்கிள் லினக்ஸ், RedHat , Windows விருப்பப்படி பெறலாம். கணக்கீடு தயாரானதும், நீங்கள் SSH செய்து உங்கள் root அணுகலைப் பெறலாம்! நீங்கள் விரும்பும் அனைத்தையும் நிறுவவும் – ஒரு வலைத்தளம்/ஆப்ஸை இயக்க LAMP (Linux/Apache/MySQL/PHP) ஐ அமைக்கலாம்
  • Block Storage200 GB இலவச சேமிப்பக அமைப்பு. மேலே குறிப்பிட்டுள்ளபடி உருவாக்கும் ஒவ்வொரு கம்ப்யூட்டிற்கும் குறைந்தபட்சம் 47 ஜிபி சேமிப்பகம் தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். தொழில்நுட்ப ரீதியாக, நீங்கள் அதிகபட்சமாக 4 கம்ப்யூட் (4 x 47 ஜிபி ~ 200 ஜிபி) வைத்திருக்கலாம்.
  • Boot vs Block volumes – Boot volume compute instanceடன் ஒருங்கிணைக்கப்பட்டது! ஆனால் block volume என்பது கூடுதல் volume. It’s like வெளிப்புற HDD சேமிப்பகம்.

OCI comes with 200GB! நீங்கள் ஒரு instanceஜ 50 GB boot volumeடன் தொடங்கலாம், பின்னர் instanceன் சேமிப்பக திறனை விரிவாக்க 150GB block volume உருவாக்கி இணைக்கலாம். அதாவது 1 x50 ஜிபி +150 GB = 200GB! OCI இலவச காப்புப்பிரதிகளையும் வழங்குகின்றன (ஐந்து தொகுதி காப்புப்பிரதிகள்)

  • Database(தரவுத்தளம்): Oracle APEX மற்றும் Oracle SQL Developer போன்ற சக்திவாய்ந்த கருவிகளைக் கொண்ட இரண்டு Oracle Autonomous Databases – இலவச வரம்பு 20 GB ! மேலும் வழங்குகிறார்கள் Oracle’s NoSQL Database – 25 GB x 3டேபிள்கள் ( = 75 GB)
  • Buckets – Object மற்றும் archived சேமிப்பு – AWSல் உள்ள S3 பக்கெட்களைப் போன்றது. OCI இலவச 20 GB சேமிப்பகத்தை வழங்குகிறது, அங்கு மீடியா போன்ற பொருட்களைச் சேமிக்கலாம்/மீட்டெடுக்கலாம்.

OCI – கிளவுட் tech தொடங்குவதற்கு ஒரு சிறந்த வழியாகும். எந்த செலவும் அல்லது ஆபத்தும் இல்லாமல் புதிய சாத்தியக்கூறுகளை ஆராயலாம். Python, MySQL மற்றும் பல போன்ற தொழில்நுட்பம்/கருவிகள் கற்றுக்கொள்ளலாம்/பரிசோதனை செய்யலாம்.

Good luck!

Blog – http://blog2.kesavan.info (Again this is powered by OCI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *